Tuesday, February 28, 2012

புலம்பெயர்தல்

எல்லா இடத்துலயும் தமிழ்ல பேசலாம்ங்கற ஒரு விஷயமே தமிழ்நாட்டுக்கு ஷிப்ட் ஆகுறதுக்கான பெரிய அட்ராக்ஷனா இருக்கு (அட்லீஸ்ட் எனக்கு).

பெங்களூர்ல இருந்து பஸ்ல தமிழ்நாட்டுக்கு வரும் போது, ஹோசூரைத் தொடுரப்பவே தமிழ்ல இருக்கிற கடை பெயர்கள், விளம்பர போர்ட்கள், TN ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகள்ன்னு எல்லாத்தையும் பாக்கப் பாக்க அவ்வளோ சந்தோஷமா இருக்கும். :)

ஆட்டோகாரர்ல இருந்து ஹோட்டல்காரர் வரை, பஸ் கண்டக்டர்ல இருந்து போஸ்ட்மேன் வரை, சின்ன டீ கடைல இருந்து ஷாப்பிங் மால்ஸ் வரை இருக்கிற எல்லார் கிட்டயும் தமிழ்ல பேசலாம்ங்கறது எவ்வளோ சந்தோஷமான விஷயம்னு தமிழ்நாட்டுல இருந்து வேலைக்காகவோ, படிப்புக்காகவோ, வேற எதுக்காகவோ வெளி ஊர்களுக்கு போய் வாழுரவங்களுக்கு மட்டுமே புரியும். :)

சில சமயம் யோசிச்சுப் பாத்தா, இந்த சின்ன சந்தோஷம் (அக்சுவலா பெரிய்ய்ய சந்தோஷம்) எங்கள மாதிரி இருக்குறவங்களுக்கு மட்டுமே (கொஞ்ச நாட்களுக்கு) கெடைக்கற போதைன்னு கூட சொல்லலாம்.

சின்ன வயசுல எல்லாம் மதுரை மட்டுமே எங்க ஊருன்னு, அங்க இருக்கிறது மட்டுமே சந்தோஷம்னு நெனச்சுக்கிட்டு இருந்த மனசு, இப்போ தமிழ்நாட்டுல எந்த ஊருமே சந்தோஷமானது தான்னு புரிஞ்சிக்கிட்டிருக்கு. அதுக்காக வேணா இந்த பெங்களூர் வாழ்க்கைக்கு நன்றி சொல்லலாம். மத்தபடி பாருங்க,  இருபத்தி இரண்டு  வருஷமா  பேசிகிட்டு இருந்த மொழியை பேச முடியாம, சின்ன கடைகக்கு போனாக்கூட வேண்டியதை கேட்டு வாங்க தடுமாறிட்டு, வழி கேக்க தெரியாம, பஸ்ல எழுதி இருக்கிற இடத்துப் பேரை படிக்க முடியாம, என்ன வாழ்க்கைடா இது.. :( 

ஆனா பாருங்க, இந்த புத்தி கெட்ட மனசுக்கு இதெல்லாம் படிக்கும் போது தெரியறது இல்ல.  ஒரு வேலைன்னு கெடச்ச உடனே பெங்களுரா, ஹைதராபாத்தா எங்கனு கூட பாக்காம சரின்னு கிளம்பிடுது. ஒரு ரெண்டு வருஷங்கள், ரெண்டரை வருஷங்களுக்கு அப்றமா தான் சொந்த ஊரைப்பத்தி யோசிக்க ஆரம்பிக்குது. என்னத்தச் சொல்ல. :(

சரி எதுக்கு இவ்வளோ கதை சொல்லிக்கிட்டு இருக்கனு கேக்குறீங்களா? 
கொஞ்ச நாளாவே  சென்னைக்கு ஷிப்ட் ஆகி போகணும்ன்னு ஒரு ஆசை மனசுல வந்துக்கிட்டே இருக்கு, அதான்.

சரி, நம்ம என்ன ஆசைப்பட்டு என்ன பிரயோஜனம்? என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும்.